காங்கிரஸ் வேட்பாளரை செருப்பால் அடித்த முதியவர்.... பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

 
செருப்படி

மத்திய பிரதேசத்தில்  நேற்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது மொத்தமுள்ள  230 சட்டசபை தொகுதிகளுக்கும்   ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில்  இதில் பதிவான வாக்குகள்  டிசம்பர் 3ம் தேதி வாக்குகள்  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.  ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்கவும்  இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு போராடி வருகிறது. 

செருப்படி
இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட்ட  காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் சாலையோர நபர் ஒருவரிடம் செருப்பால் அடி வாங்கிய சம்பவம்  அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் ரட்லாம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பராஸ் சக்லேச்சா. இவரை  சாலையோரம் அமர்ந்திருக்கும்  முதியவர் ஒருவர்  அவரது தலை, முகத்தில் அந்த நபர் செருப்பால் அடித்துள்ளார். அதனை பராஸ் சக்லேச்சா தடுக்காமல் சிரித்தபடி அடிவாங்கிவிட்டு அவரது காலை தொட்டு வணங்கிவிட்டு  சென்றுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் செருப்பால் அடி வாங்கியது பொதுவெளியில் பரவி பெரும் சர்ச்சையாக  உருவெடுத்துள்ளது.

செருப்படி

காங்கிரஸ் வேட்பாளர் பராஸ் சக்லேச்சாவை செருப்பால் தொடர்ந்து அடித்த நபரை அந்த பகுதி மக்கள் நடமாடும் பாபா என அழைக்கின்றனர். இஸ்லாமியரான இவரை அந்த பகுதி மக்கள் ஃபகிரா பாபாஜி என்கின்றனர். இவர் தம்முடைய பக்தர்களை செருப்பால் அடிப்பதை ஆசிர்வாதமாக ஏற்றுக் கொள்கின்றனர்.  இதனால் அவரை பார்ப்போர் செருப்பு கொடுத்து அடி வாங்கி கொள்கின்றனர். அந்த வகையில் தான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஃபகிரா, பாபாஜியிடம் காங்கிரஸ் வேட்பாளர் பராஸ் சக்லேச்சா புதிய ஜோடி செருப்பு வாங்கி அடிவாங்கி இருக்கிறார் எனத் தெரியவந்துள்ளது.  இந்நிலையில்  அவரது இந்த செயலை பலரும் மூடநம்பிக்கை என விமர்சனம் செய்யத் தொடங்கி உள்ளனர்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web