தூள்.. வீடியோ... பிச்சை எடுத்த மூதாட்டி இன்று இங்கிலீஷ் டீச்சர்..!!

 
மெர்லின்

வேலை செய்ய வயது ஒரு தடையில்லை. வாய்ப்பும், நேரமும் கிடைத்துவிட்டால் யாரும் இங்கு தனியில்லை என்பதை மீண்டும் ஒரு முறை உலகுக்கு உணர்த்தியுள்ளார் 81 வயது மூதாட்டி. மியான்மரில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்தவர்   மெர்லின்.இவருக்கு வயது 81. இவர் திருமணத்திற்குப் பின்பு இந்தியாவில் வந்து தஞ்சம் அடைந்துள்ளார்.  இங்கு வந்ததும் அவருடைய உறவுகள் ஒவ்வொருவராக இறந்து விட தனித்து விடப்பட்டார். அதன் பிறகு  மெர்லின் சென்னையில் யாசகம் பெற்று தனியாக வாழ ஆரம்பித்தார்.


 இந்நிலையில், முகமது ஆஷிக் என்ற 21 வயது இளைஞர்  , மெர்லினை சந்தித்து பேசத்தொடங்கினார். அவரது ஆங்கில பேச்சு கேட்டு அரண்டு போனார்.  அதன் பிறகு  தற்போது ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியையாக மெர்லின் மாறியுள்ளார்.இதுகுறித்து ஆசிக் " ஆங்கிலம் கற்பிப்பதற்கான வீடியோக்களை உருவாக்க உதவுமாறு மெர்லினிடம் கோரிக்கை விடுத்தேன்.  ஒவ்வொரு வீடியோவிற்கும் பணம் கொடுக்க அவருடன் ஒப்பந்தம் செய்துள்ளேன். என்னால் முடிந்த   தொகையை  அவருக்குத் தருகிறேன்.  

 

மெர்லின்

இதன் மூலம் மெர்லின் யாசகம் எடுக்கும் தொழிலில் இருந்து விடுபட்டார். மேலும் தன்னுடைய நேரங்களை மற்றவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கற்பித்து வருகிறார்.  
தற்போது இன்ஸ்டாகிராம் மூலம்  ஆஷிக், மெர்லின் ஆங்கிலப்பயிற்சி உரையாடல் வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. @englishwithmerlin என்ற இந்த இன்ஸ்டாகிராம் கணக்கை மாணவர்கள்  ஃபாலோ செய்கின்றனர்.  அன்றாட வாழ்வில்  தினசரி பயன்பாட்டு ஆங்கில வாக்கியங்களை மெர்லின் பகிர்ந்து கொள்கிறார். இந்த  வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web