கிரேன் உடைந்து விழுந்து ஆபரேட்டர் பலி!! துறைமுகத்தில் பரபரப்பு!!

 
பாரத்

தூத்துக்குடி  மாவட்டத்தில் அமைந்துள்ள   வ.உ.சி துறைமுகத்தில் பனமா நாட்டு  கப்பலில் எகிப்து நாட்டுக்கு நிலக்கரி ஏற்றுமதி செய்யும் பணி நடைபெற்று வந்தது. இதனை, எஸ்தோ லேபர் காண்ட்ராக்ட் மூலமாக, தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் வசித்து வரும்  மீனவர் காலனி பகுதியில் வசித்து வரும்   பாரத் கப்பலில் உள்ள கிரேன் மூலமாக லாரிகளில் இருந்து நிலக்கரியை கப்பலில் ஏற்றி கொண்டிருந்தார்.  

பாரத்

திடீரென, கிரேன் உடைந்து கப்பலின் உள்ளே விழுந்துவிட்டது.   இதில் கிரேனுக்கு அடியில் சிக்கி இருந்த பாரத்தின் மேல்   கிரேன் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் உடனடியாக மற்றோரு கிரேன் மூலமாக பாரத் மீட்கப்பட்டார்.  அவரை  மீட்டு வஉசி துறைமுக ஆம்புலன்ஸ் மூலமாக   மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  முதலுதவிக்கு பிறகு  மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  

பாரத்

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வெளிதுறைமுக கப்பல்   துறைமுகத்திற்குள் வரும்போது  கப்பலில் உள்ள பொருட்களை இறக்கும் போதும், ஏற்றும் போதும் பாதுகாப்பு அதிகாரிகள் கப்பலில் சோதனையிட வேண்டும். அதன் பின்னரே கப்பலில் உள்ள பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால் அதிகாரிகள் சோதனை செய்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அதனால் தான் இந்த  கோர சம்பவம் நடைபெற்றதாக வஉசி துறைமுக தொழிலாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web