பைக்குடன் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்த நபர்!!

 
தொபுக்கடீர்

திருச்சி தென்னூர்,  வீரமாமுனிவர் தெருவில் சாலை விரிவாக்கம் மற்றும்   பாதாள சாக்கடை பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டன. இதனால் சாலைகள் மிக மோசமான நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர், சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் திடீரென நிலை தடுமாறி வண்டியுடன் குழிக்குள் விழுந்து விட்டார்.

விபத்து

இதனை நேரில் பார்த்த பொது மக்கள் உடனடியாக அந்த நபரை எந்தவித ஆபத்தும் இன்றி சிறிய காயங்களுடன் மீட்டனர். அத்துடன் அவரது வாகனத்தையும்  மீட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து  வெளியிட்ட செய்திக்குறிப்பில் "இந்த ஆபத்தான சாலையில் தினம் தினம் வாகன ஓட்டிகள் விழுவது வாடிக்கையாகி வருகிறது.

ஆம்புலன்ஸ்

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் வார்டாகவும் மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என் நேருவின் தொகுதியாகவும் உள்ள இந்த பகுதியில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. மழைக்காலங்களில் சேரும் சகதியுமாகவும், வெயில் காலங்களீல் குண்டும்  குழியுமாகவும் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இப்பகுதியில்  நடக்க இயலாத சூழல் ஏற்படுகிறது. எனவே உடனடியாக இந்த சாலையை சீர் செய்ய வேண்டும்" என   பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web