எம்.பி சீட் கேட்டவர் கொடூரக்கொலை... தாய், மகள் உட்பட 7 பேர் அதிரடி கைது!

 
நசீமா

 
இந்தியாவில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதிப்பங்கீடு குறித்து தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சிங்கோட்டம் பகுதியில் வசித்து வருபவர்  புட்டா ராமு. 36   வயதான  பாஜ பிரமுகரான இவர் ஐதராபாத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார்.  அத்துடன் அப்துல்கலாம் அறக்கட்டளை  பெயரில் சமூகசேவை செய்து வந்தார்.  இந்நிலையில் பிப்ரவரி   7ம் தேதி ஐதராபாத் நிஜாம்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ரவுலபாலம் பகுதியில் வசித்து வரும் 40 வயது   பெண் ஹிமாம்பி,  அவரது மகள் 19 வயது நசீமா இருவரும் சேர்ந்து   ரவுடி கும்பலுடன் இணைந்து  புட்டா ராமுவை கொலை செய்துள்ளனர் என உறுதி செய்யப்பட்டது.

அடித்தே கொலை

இது குறித்து விசாரணை நடத்த  ஹிமாம்பி, நசீமா, மணிகண்டா, வினோத், முகமதுகைசர், பண்டாசிவா, கபாலா நிகில் ஆகிய 7 பேரை போலீசார்  பிப்ரவரி 9ம்தேதி   கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட  விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.  கணவரை விட்டு பிரிந்த ஹிமாம்பி தனது மகள் நசீமாவுடன்  தெலங்கானா மாநிலம் ஐதராபாத் யூசுப்குடாவில் உள்ள ஒரு போலீஸ்காரரின் வீட்டில் வாடகைக்கு குடியேறினார். சில நாட்களில்  ஹிமாம்பிக்கும் போலீஸ்காரருக்கும்  தகாத உறவு ஏற்பட்டுள்ளது.  ஹிமாம்பி வாடகைக்கு குடியிருந்த வீட்டை அவரது பெயருக்கே போலீஸ்காரர் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இதன் பிறகு   பாஜ பிரமுகர் ராமுவுடன் ஹிமாம்பிக்கு பழக்கம் ஏற்பட்டது.

போலீஸ்

 இந்நிலையில் ஹிமாம்பியின் மகள் நசீமாவை  அனுப்பச்சொல்லி ராமு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு  கு ஹிமாம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நசீமாவை அடைய பலமுறை முயற்சித்துள்ளார்.  ஆத்திரமடைந்த ஹிமாம்பி, ராமுவை கொல்ல முடிவு செய்தார். இதனையடுத்து   ராமுவின் சூதாட்ட நண்பர்களான மணிகண்டா,  , வினோத்தை பழக்கப்படுத்திக் கொண்டார். போக வர இருந்ததில்  நசீமாவும் வினோத்தும் காதலிக்க தொடங்கினர்.   அவர்கள் 4 பேரும் ராமுவை கொல்ல திட்டமிட்டனர். அதன்படி  7ம்தேதி நசீமா போன் செய்து ராமுவை அழைத்து  அவரை 11 பேர் சேர்ந்து கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.  , ராமுவின் செல்போனில்  நசீமா கடைசியாக பேசியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில்  7 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web