நடுவானில் விமானத்தில் ரத்தம் கக்கி உயிரிழந்த நபர்... அலறி கூச்சலிட்ட சக பயணிகள் !

 
விமானம்

சமீபகாலமாக விமானப்பயணங்கள் பெரும் சவாலானதாக இருந்து வருகிறது. விமானத்திற்குள் நடைபெறும் சீண்டல்கள், விமானப் பயணிகளின் அருவறுக்கத்தக்க செயல்கள், விமான நிர்வாகத்தின் குறைபாடுகள் என தொடர்ந்து வருகின்றன. இவை தொடர்கதையாக இருப்பது விமானப் பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து ஜெர்மனியின் முனிச் நகருக்கு பிப்ரவரி 8ம் தேதி   இரவு லுப்தான்சா பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது 63 வயது நிரம்பிய பயணி ஒருவருக்கு திடீரென கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

விமானத்தில் பலி

உடனடியாக விமான ஊழியர்கள் அவருக்கு ஆக்சிஜனை சுவாசிக்க கொடுத்தனர். ஆனாலும் அவர்   சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்தார். மூக்கில் இருந்தும் ரத்தம் கொட்டத் தொடங்கியது. இதன் பின்னர் மயங்கிசரிந்து கீழே விழுந்தார். அவருடன் பயணம் செய்து கொண்டிருந்த அவரது மனைவி இதைப் பார்த்து  கதறி அழுதார். சக பயணகளும் பயத்தில் கூச்சலிட்டனர்.  
விமான பணியாளர்கள் மற்றும் விமானத்தில் இருந்த  மருத்துவர் ஒருவரும்  இணைந்து அந்த பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சுவாசத்தைமீட்பதற்காக சி.பி.ஆர். நடைமுறையும் மேற்கொள்ளப்பட்டது. தீவிர முயற்சிக்கு பிறகும்  அவரை காப்பாற்ற முடியவில்லை. மனைவியின் கண் முன்னே அந்த பயணி பரிதாபமாக உயிரிழந்தார். பயணி உயிரிழந்ததை பைலட் அறிவித்தபோது விமானப்பயணிகள் சிறிந்து நேரம்   நிசப்தமாக இருந்தனர். இதனையடுத்து  உயிரிழந்தவரின்   உடல் விமானத்தின் கேலரிக்குள் வைக்கப்பட்டு, விமானம் தாய்லாந்துக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் நேற்று காலையில் தாய்லாந்தில்  தரையிறங்கியதும்உரிய நடைமுறைகளுக்கு பிறகு, அவரது உடல் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

விமானத்தில் பலி


விமானத்தில் நடந்த இந்த மரணத்தை நேரில் பார்த்த அந்த   அதிர்ச்சியில் இருந்து இன்னும் நாங்கள் மீளவில்லை என்கின்றனர் அந்த விமானத்தில் பயணம் செய்த சகபயணிகள்.  
 விமானத்தில் ஏறும்போதே அவருக்கு  உடல்நிலை சரியில்லாமல் இருந்தது, குளிரிலும் அவருக்கு வியர்த்து கொட்டத் தொடங்கியது, வேகவேகமாகமூச்சு விட்டார் என சகபயணி  ஒருவர் தெரிவித்துள்ளார்.   அவரது நிலை இவ்வளவு மோசமாக இருந்தும் விமானி ஏன் விமானபயணம் செய்ய அவரை அனுமதித்தனர் என்பது தான் புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது என்கின்றனர்.  
 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web