”Blood Group டெஸ்ட் பண்ணனும்” நைசா பேசி போன்களை அபேஸ் செய்த கில்லாடி.. மடக்கி பிடித்து அமுக்கிய போலீசார்..!

 
 கொசு ராஜேஷ்

சென்னை புது வண்ணார்பேட்டை லட்சுமி அம்மன் கோவில் பகுதி அருகே, திருவொற்றியூர் காளத்திப்பேட்டை பகுதியை சேர்ந்த சரவணகுமார், ஒமேகா என்ற பெயரில் ரத்த பரிசோதனை மையம் நடத்தி வருகிறார். இந்த சோதனை மையத்தில் நேற்று காலை ஒரு லேப் டெக்னீசியன் மற்றும் இரண்டு பெண் ஊழியர்கள் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற கொசு ராஜேஷ் ரத்த பரிசோதனை செய்ய அங்கு வந்தார்.

அங்கிருந்த ப்ரீத்தா, ரத்த மாதிரி எடுத்து, ஊசி போட்ட இடத்தில் பஞ்சு வைத்து கையை மடக்கினார். பின், பக்கத்தில் இருந்த இருக்கைக்கு சென்று உட்காரச் சொல்லி, உள்ளே சென்று ரத்த மாதிரியை ரத்த பரிசோதனை இயந்திரத்தில் போட்டுவிட்டு திரும்பினார்.இந்த இடைவெளியில் இருக்கையில் அமர சென்ற ராஜேஷ், மேஜையில் இருந்த மூன்று செல்போன்களை எடுத்துக்கொண்டு ஓடினார். இதையடுத்து, சோதனை மையத்தின் உரிமையாளர் சரவணக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஒமேகா ரத்தப்பரிசோதனை நிலையம்

அதன் அடிப்படையில் திருவொற்றியூர் உதவி கமிஷனர் தனிப்படை போலீசார் ராஜேஷை தீவிரமாக தேடி வந்தனர். ஆர்.கே.நகர் பகுதியில் வைத்து அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, ​​இதேபோல் கொடுங்கையூர், தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள ரத்த பரிசோதனை மையங்களில் ஏற்கனவே  திருடப்பட்ட 5 செல்களைராஜேஷிடம் இருந்து கைப்பற்றினர். தொடர்ந்து, விசாரணைக்கு பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web