பகீர் சிசிடிவி காட்சிகள்... கோவிலில் சாமி கழுத்தில் இருந்த தங்கத் தாலியை திருடிச் சென்ற நபர்!

 
சிவசுப்பிரமணி


கோவிலில் சாமி கும்பிட வருபவர்கள் தங்கள் நகைகள் உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் படி கோவில்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு சாமி கும்பிட வந்த பக்தர் ஒருவர் சாமி கழுத்தில் இருந்தநகையையே ஆட்டையை போட்டுள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கோவிலில் அம்மனின் இரண்டரை பவுன் தாலி சங்கிலியை இளைஞர் ஒருவர் திருடியுள்ளார். கோவிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் திருடனை கைது செய்தனர்.

 


மண்ணச்சநல்லூர் அருகே உள்ள இனாம்கல் பாளையம் கிராமத்தில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில்  ஜூலை 8ம் தேதி அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த இரண்டரை பவுன் தாலி சங்கிலி திருட்டு போனது. இதுகுறித்து கோவில் பூசாரி பரமேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தார்.  அத்துடன் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் நகையை திருடிய ஆசாமியை  தேடி வந்தனர். போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது, அந்த வழியாக வந்த கரூர் அருகே உள்ள பசுபதிபாளையத்தில் வசித்து வந்த  38 வயது  சிவசுப்பிரமணியனை  பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் அம்மன் கழுத்தில் கிடந்த நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். ஏற்கனவே இவர் மீது திருச்சி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள காவல் நிலையத்தில் 15க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அத்துடன்  கடந்த 6 மாதத்திற்கு முன்பு தொட்டியம் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்துள்ளார் என்பதும் கூடுதல் தகவல்.  
இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.  சிவசுப்பிரமணியன் கோவிலில் திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web