வைரல் வீடியோ... காரின் மேல் நின்று பணத்தை அள்ளி வீசிய நபர்!!

 
விசிறிய பணம்

மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பிரபலமான சீரியல்   'மணி ஹெய்ஸ்ட்' . வங்கிகளில் பணத்தை  கொள்ளையடிப்பது தான் இந்த வெப் சீரிஸின் கதை.   ஒவ்வொரு வங்கியிலும் எப்படி புதுப்புது டெக்னிக்குகள்களை பயன்படுத்தி அவர்கள் கொள்ளைடிக்கிறார்கள் என்பதுதான் இதில் சுவாரசியமே.  அந்த வெப் சீரிஸில் ஒரு காட்சியில், காவல்துறையிடம்  இருந்து தப்பிப்பபதற்காக தாங்கள் கொள்ளையடித்த பணத்தின் ஒருபகுதியை  சாலையில் வீசி எறிவார்கள். இதனை எடுக்க மக்கள் கூட்டம் கூடும்.


இந்த சமயத்தை பயன்படுத்தி அந்த கொள்ளை கும்பல் தப்பியோடிவிடும்.   அதே காட்சியை ராஜஸ்தானில் ஒரு இளைஞர் உண்மையிலேயே செய்துள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள மால்வியா நகரில்   காரின் மேலே ஏறி நின்றார். அவர்  'மணி ஹெய்ஸ்ட்' சீரியஸில் கொள்ளைக் கும்பல் அணிந்திருப்பதை போலவே உடையையும், முகமூடியையும் போட்டிருந்தார். அவர் தனது பையில் இருந்த ரூ 500 பணக்கட்டுகளை பிரித்து சாலையில் விசிறியடித்தார். இதனை பார்த்த மக்கள் முண்டியடித்துக் கொண்டு கீழே சிதறிய பணத்தை எடுத்துச் சென்றனர்.

விசிறிய பணம்

 அவர் பணத்தை வீசியதால் மக்கள் கூட்டம் சேர்ந்து பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், பணத்தை எடுக்கும் தகராறில் சிலருக்குள் அடிதடி சண்டையும் உருவானது. இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  குறிப்பிட்ட நபரை கைது செய்தனர்.   யார் அவர், ; வீசிய பணம் யாருடையது; அவரது பின்னணி என்பது  குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web