19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விழுந்து விபத்து!

 
விமான விபத்து
 

நேபாளத்தில் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தனியார் விமானம் ஒன்று 19 பேருடன் பயணித்தது.    காலை 11 மணிக்கு  புறப்பட்ட சௌர்யா ஏர்லைன்ஸ் விமானத்தில், விமான ஊழியர்கள் உட்பட குறைந்தது 19 பேர் பயணம் செய்தனர். விமானம் ஓடுதளத்தில் வேகமாக மேலே எழும்ப முயன்றபோது திடீரென சறுக்கி, விமான நிலையத்தை ஒட்டியுள்ள பணியிடத்தில்  விமானம் விழுந்து நொறுங்கியது.

விமானவிபத்து

விமானம் முழுவதும் தீப்பற்றி எரிய  தொடங்கியது. விமானம் முழுவதும் தீயில் கருகிய நிலையில் 18 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். விமானத்தின் விமானி ஷக்யா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  விபத்து ஏற்பட்ட விமானம் விமானத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொக்காரா என்ற ரிசார்ட் நகருக்கு புறப்பட்டபோது விபத்து ஏற்பட்டது.  விபத்தைத் தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நேபாளத்தில் ஓடுபாதையில் வெடித்துச் சிதறிய விமானத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் பெரும் பதட்டத்தையும் , அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web