ரயிலில் கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா.. வடமாநில இளைஞர்கள் அதிரடியாக கைது.!

 
 ஒடிசா மாநிலத்தவர்கள் கைது

திருப்பத்தூர் மாவட்டம்   ஜோலார்பேட்டை அருகே  கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட  5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர்  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜோலார்பேட்டை பேருந்து நிலையத்தில்  நின்றிருந்த வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.

ஜோலார்பேட்டை சந்திப்பு - தமிழ் விக்கிப்பீடியா

விசாரணையில் இவர்கள் ரயில் மூலம் புவனேஸ்வரில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. இதனைதொடர்ந்து,   மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த முகமது அஜில் நியா,  ஒடிசா மாநிலத்தை சேர்ந்த  நிர்மல் குமார் மோடி, ஜிப்து கிசான், தரணி சாகூர் , மற்றும் அரவிந்தா மோடி ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் இன்னும் எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்றும். எவ்வாறு கஞ்சா கிடைக்கிறது என்றும் காவல்துறையினர்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web