மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய இளைஞர்.. கையும் களவுமாக கைது செய்த போலீசார்.!

 
 நகை கொள்ளை

திருவண்ணாமலையில் மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.  திருவண்ணாமலை மாவட்டம் கன்னிகோவில் தெருவை சேர்ந்தவர் இந்திரா. இவர் வீட்டில்தனியாக வசித்து வந்த நிலையில்,  கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மகன் வீட்டிற்கு சென்று திரும்பியபோது , வீட்டின்   கதவு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே  சென்று பார்த்தார். 

தஞ்சையில் பட்டப்பகலில் ஆசிரியர் வீட்டில் நகை,பணம் கொள்ளை - Kumudam - News |  Magazines

அப்போது வீட்டில் இருந்த 8 சரவன் தங்க நகை மற்றும் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்து. இது குறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கன்னிகோவில் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

Tiruvannamalai, Tiruvannamalai : திருவண்ணாமலை: கல்லேரி கிராமம் அருகே லாரி  மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ரயில்வே ஊழியர் சிகிச்சை பலனின்றி ...

அப்போது, ஆரணி காந்திநகர் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பதும், இவர் மூதாட்டியின் வீட்டில் திருடிய நபர் என்றும்  கண்டறியப்பட்டது. தொடர்ந்து, அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து  அவரிடம் இருந்த  நகைகளை பறிமுதல் செய்து ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web