இளம்பெண்ணை துரத்திய போலீஸ்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு!!

சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வருபவர் தீபிகா . இவருடைய தந்தை தொழிலதிபர். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். அதே போல் காரைக்காலில் வசித்து வரும் கௌதம் என்ற இளைஞர் டிப்ளமோ படித்துமுடித்துவிட்டு அம்பத்தூரில் தங்கி வேலை தேடி வந்தார்.இந்நிலையில் தீபிகாவும், கௌதமும் காதலித்து வந்தனர்.
மாணவியின் பெற்றோர் தீபிகாவைகண்டித்தனர். இதனால் தீபிகா வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் பதிவு திருமணம் செய்து கொண்டார். தங்களது மகளைக் கடத்தி சென்று விட்டு திருமணம் செய்து கொண்டதாக தீபிகாவின் பெற்றோர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீஸார் மாணவியைத் தேடி காரைக்கால் சென்றனர்.
இது குறித்து அறிந்த காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று தஞ்சம் அடைந்தது. அவர்களைத் பிடிக்க வந்த போலீஸாரை வழக்கறிஞர்கள் தடுத்தனர். காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழைக் காண்பித்தனர். பெற்றோர் மிரட்டுவதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டனர். அதன்பிறகு நீதிமன்ற வாசலில் தீபிகா தனது நகைகளை கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு, காதல் கணவருடன் சென்றுவிட்டார். இச்சம்பவத்தால் காரைக்கால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!