போலீஸ் இன்ஸ்பெக்டரை அரைகுறை ஆடையில் கட்டி வைத்து தர்ம அடி..!! பகீர் வீடியோ!!

 
ins

சமீபகாலமாக இளம்பெண்கள்  , பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன.  பள்ளி செல்லும் சிறுமி முதல் மூதாட்டி வரை எந்நேரமும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.  உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை  அடுத்துள்ள பர்ஹான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்தீப் குமார்   மதுபோதையில் திஹேயா கிராமத்தில் வசிக்கும் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி   நுழைந்து  அந்த வீட்டில் இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார்.  இதற்காக அந்த சிறுமியின் ஆடைகளைக் கிழித்தெறிந்தார். கூச்சலிட்ட சிறுமியை தாக்கினார். 


சிறுமியின் கூச்சல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். நடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இன்ஸ்பெக்டரின் பிடியில் இருந்த சிறுமியை மீட்டனர். அரை நிர்வாணமான இருந்த இன்ஸ்பெக்டரையும் சுற்றுவளைத்து பிடித்தனர்.ஏராளமான பொதுமக்கள் கூடியதால்,  அனைவரும் ஒன்று சேர்ந்து இன்ஸ்பெக்டரை வீட்டின் அருகே உள்ள தூணில் கட்டி வைத்தனர். அங்கிருந்த சிலர் இன்ஸ்பெக்டரை கடுமையாக தாக்கினர்.

இச்சம்பவம் குறித்த வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு வந்த உயர் அதிகாரிகள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்ஸ்பெக்டரை மீட்டனர். குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் சந்தீப் குமாரை, உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அத்துடன்  அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்பெக்டர் ஒருவர் போதையில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும்,  பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web