3 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு!

 
ஓபெக் கச்சா எண்ணெய் க்ரூட் ஆயில்
 

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயித்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.

பெட்ரோல்

இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு கணிசமான லாபம் கிடைத்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் உயர்வால், நுகர்வோர்களும் லாபம் அடையும் வகையில் விலை குறைப்பை அமல்படுத்தலாம் என்பது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  
விரைவில் ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தாண்டு இறுதியில் மகாராஷ்டிராவிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைக்  கருத்தில் கொண்டு இந்த விலை குறைப்பை கொண்டு வரலாம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  எண்ணெய் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படமால் இந்த விலைக்குறைப்பை கொண்டு வருவது தொடர்பாக துறை சார்ந்த இரு அமைச்சகங்களுக்கு இடையே ஆலோசனை நடந்து வருகிறது.  

பெட்ரோல் மோசடி


சர்வதேச சந்தையை பொறுத்தவரை அமெரிக்காவில்  கச்சா எண்ணெய் விலை 1 சதவிகிதம் குறைந்து பேரல் ஒன்றின் விலை 70 டாலருக்கு கீழ் குறைந்துள்ளது.  விலை சரிவை சந்தித்து இருப்பதால் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் பெட்ரோலிய உற்பத்தியை அதிகரிப்பதை தாமதம் செய்யலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை