இந்த செருப்பின் விலை ரூ.1 லட்சமாம்.. எங்கு தெரியுமா?.. ஷாக்கான நெட்டிசன்கள்!
பொதுவாக, நாம் கழிப்பறைக்குச் செல்லும்போது, அல்லது எங்காவது வெளியே செல்லும்போது, மேலே வெள்ளையாகவும், கீழே நீலமாகவும் இருக்கும் ஹவாய் செப்பலைப் பயன்படுத்துவோம். இந்த செருப்புகள் இந்தியாவில் மிக குறைந்த விலையில் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால், சவுதி அரேபியாவில் ஹவாய் செருப்பின் விலை ரூ. 1 லட்சத்துக்கும் மேல் விற்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
🚨We Indians use these sandals as a toilet footwear 😂#Kuwait #MiddleEast #GULF #India #Footwear #slippers #SaudiArabia #UAE pic.twitter.com/4JrFEV8rqK
— Amresh (@amaresh_24) July 17, 2024
உங்கள் குளியலறையில் பயன்படுத்தக்கூடிய செருப்புகள் இவ்வளவு பெரிய விலையில் விற்கப்படுவதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? பல நெட்டிசன்களும் அப்படித்தான். இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், கடையின் கையுறை அணிந்த ஊழியர் ஒருவர், ஒரு ஜோடி காலணிகளை இழுத்து கண்ணாடி மேசையில் வைத்து வாடிக்கையாளரிடம் காட்டியுள்ளார். இதன் விலை இந்திய ரூபாய் (ரூ. 1,00,305) அதாவது 4,500 ரியால்கள் என கூறப்படுகிறது.

இந்த செருப்பின் சிறப்புகளை வாங்குபவருக்கு எடுத்துரைக்கும் பணியை ஊழியர் பார்த்தார். இந்த ரப்பர் மிகவும் மிருதுவானதாகவும், காலில் வைத்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறுகிறார். இருப்பினும், இந்த விலைக்கு இந்த செருப்பா? என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், "இந்தியர்களான நாங்கள் இந்த செருப்பை டாய்லெட் செருப்பாக பயன்படுத்துகிறோம்" என்றும், இந்த செருப்புகள் எங்கள் ஊரில் மிகவும் விலை குறைந்ததாகவும் பல இந்தியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
