அம்மன் திருமாங்கல்யத்தை திருடிய அர்ச்சகர்.... பிரபல கோவிலில் அதிர்ச்சி !

 
திருவேற்காடு

கோவிலுக்கு போனா சாமிகிட்ட வரம் கேட்கலாம். நகையைகேட்கலாமா இல்லை எடுத்தே கொள்ளலாம் என்கிற மாதிரி அர்ச்சகரே அம்மனின் நகையை திருடி சென்று விட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.சென்னையில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம் பிரசித்தி பெற்றது. 

திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் அம்மனின் கழுத்தில் இருந்த மாங்கல்யம், தாலி சங்கிலி ஆகியவை திருடப்பட்ட சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கோவில் பொறுப்பாளர் கனகசபரி அளித்த புகாரின் பேரில் திருவேற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலில் அம்மனிடம் வரம் கேட்கலாம். ஆனால் அம்மனின் நகைகளையே திருடலாமா? அதுவும் அம்மன் கழுத்தில் இருந்த திருமாங்கல்யத்தை திருடியுள்ளனர். அதுவும் அம்மனுக்கு தினமும் பூஜை செய்யும் அர்ச்சகரே திருமாங்கல்யத்தை திருடியதுதான் அதிர்ச்சியளிக்கும் விசயம். திருவேற்காடு தேவி கருமாரியம்மனின் கழுத்தில் இருந்த நகைகளையே திருடியுள்ளதுதான் பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திருவேற்காடு
சென்னையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று திருவேற்காடு  கருமாரியம்மன் ஆலயம். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்  தினசரி வந்து செல்லும் ஆலயமாக திகழ்கிறது.   புற்றாக அம்மன் தன்னை வெளிப்படுத்தி  தனக்கு ஆலயம் எழுப்புமாறு பக்தர்கள் கனவில் வந்து கூறிய படி கோவில் கட்டப்பட்டதாக கதைகள் உண்டு.  கோவிலில் இன்றைக்கும் அமைந்திருக்கும்  மிகப்பெரிய புற்றுக்கு  பக்தர்கள் மஞ்சள் குங்குமம்  பால் முட்டை வைத்து வழிபாடு செய்கின்றனர்.  சிவபெருமான் கைலாயத்திற்கு செல்லும் வழியில் வேப்பமரக்காட்டில் அமைந்துள்ள வேல்கண்ணியிடம்   உடலில் உள்ள சாம்பலை  கொடுத்து ஐந்து வேலைகளைச் செய்யும்படி  அறிவுறுத்தியதாக புராணக்கதையும் உண்டு.  

திருவேற்காடு

அம்மன் கோயில்களில் பொதுவாக பக்தர்களுக்கு குங்குமமே பிரசாதமாக வழங்கப்படும். ஆனால், இந்தக் கோயிலில் பசுஞ்சாணத்தால் ஆன சாம்பலையே பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகின்றனர். இந்நிலையில்   தேவி கருமாரியம்மன் கருவறையில் உள்ள உற்சவர் கருமாரியம்மனுக்கு   8 சவரன் மதிப்புள்ள தங்க நகை மற்றும் திருமாங்கல்யம் சாத்தப்பட்டிருந்தது. இந்த நகை திடீரென மாயமானது.அதிர்ச்சி அடைந்த  கோவில் நிர்வாகிகள்  முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதில் கோவிலில் தினக்கூலியாக பணிபுரியும்  அர்ச்சகர் சண்முகம் என்பவர் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் குறித்து  கோவில் பொறுப்பாளர் கனகசபரி அளித்த புகாரில்,   காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.   அம்மன் கழுத்தில் இருந்த நகை திருடப்பட்ட சம்பவம் பக்தர்கள் இடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web