நாளை திட்டமிட்ட படி போராட்டம் தொடரும்.... ஆசிரியர் சங்கங்கள் அதிரடி!!

 
போராட்டம்

தமிழகத்தில் தொடக்கக்கல்வி  ஆசிரியர்கள் சங்கம் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,  எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் உட்பட   30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட பேச்சுவாரத்தையில் எந்த சுமூக முடிவும் எட்டப்படவில்லைஇதனால் திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.  

ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


இந்நிலையில் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருடன்  நேற்று  சென்னை டிபிஐ வளாகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் 30 நிமிடம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.தமிழக அரசு ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்த 30 கோரிக்கைகளில், 9 கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற அரசு முன்வந்தது .

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள்

அதுவும் வாய்மொழியாக மட்டுமே உறுதி அளிக்கப்பட்டது. இதனால்  ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.சமீபத்தில் ஆசிரியர் சங்கங்கள் நடத்திய போராட்டத்தில்   அன்பழகனார் கல்வி வளாகம் ஸ்தம்பித்து நின்றது.  அதன் தொடர்ச்சியாக தற்போது ஆசிரியர் இயக்கங்கள் மீண்டும் போராட்டத்தை அறிவித்து இருப்பது  தமிழகம் முழுவதும் பெற்றோர்கள், மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web