பொதுமக்கள் அதிர்ச்சி... நடுரோட்டில் உதவி ஆய்வாளர்கள் கட்டிப் புரண்டு சண்டை!

 
கொத்தவால் சாவடி

பரபரப்பான காலை நேரத்தில் சென்னை அசுர வேகத்தில் இயங்கி கொண்டிருக்கும். புதிதாக சென்னைக்கு வருபவர்கள், இத்தனை சீக்கிரத்தில் எதையோ பிடித்து நிறுத்துவது போல ஏன் எல்லோரும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறார்கள் என்று யோசிப்பார்கள். அத்தனை பரபரப்பிலும், கூடுதல் பரபரப்பைக் கிளப்பும் கொத்தவால் சாவடி பகுதியில், நடுரோட்டில் போக்குவரத்து காவல் துறை உதவி ஆய்வாளர்கள் இரண்டு பேர் கட்டிப்புரண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதை அந்த வழியே கடந்து சென்ற பொதுமக்கள்  அதிர்ச்சி கலந்த பயத்துடன் பார்த்தப்படியே கடந்து சென்றார்கள். விசாரணையில், சம்மந்தப்பட்ட இரு உதவி ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து கூடுதல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கொத்தவால் சாவடியில் போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வெங்கடேசன். நேற்று காலை கொத்தவால் சாவடி லோன் ஸ்கொயர் பகுதியில் இரண்டு போக்குவரத்து காவலர்களுடன் சேர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேசன், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன் போக்குவரத்து விதிகளை மீறி சென்ற வாகனங்களை பிடித்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அதே போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் பிரபு அங்கு வந்து, பணியில் ஈடுபட்டிருந்த இரு போக்குவரத்து காவலர்களை தன்னுடன் வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.‌

உடனே சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேசன், பிரபுவிடம் அவர்கள் இங்கு வேலை செய்து கொண்டுதானே இருக்கிறார்கள். அவர்களை எதற்காக கூப்பிடுகிறாய் என கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் பிரபு வெங்கடேசனை தகாத வார்த்தையால் திட்டியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் இருவரும் நடுரோட்டில் கட்டிப்புரண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து போக்குவரத்து கூடுதல் ஆணையர் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியதுடன் அவர்களை அமைந்தக்கரை மற்றும் அண்ணாநகர் போக்குவரத்து பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இரு போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web