தாய்லாந்து ராணி சிரிகிட் கிடியாகரா காலமானார்!
தாய்லாந்தில் மன்னராட்சி முறை அமலில் உள்ளது. அந்நாட்டின் தற்போதைய மன்னர் மஹ வஜிரலொங்கொர்ன். அவரது தாயார், 93 வயதுள்ள ராணி சிரிகிட் கிடியாகரா, உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

ராணி சிரிகிட் மரணத்திற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவினைத் தொடர்ந்து, மலேசியாவில் நாளை நடைபெறவுள்ள ஏசியான் உச்சிமாநாட்டில் தாய்லாந்து பிரதமர் அனுடின் சருன்விரகுல் பங்கேற்கமாட்டார் என தாய்லாந்து பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு, ராணியின் கணவரான முன்னாள் மன்னர் அதுல்யடிஜ் 2016 ஆம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
