”வீடு வாங்கினால் மனைவி இலவசம்”.. வினோத விளம்பரத்தை பரப்பிய ரியல் எஸ்டேட் நிறுவனம்.!

 
வீடு விற்பனை

போட்டி நிறைந்த உலகில் தங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்ல வணிகங்கள் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துகின்றன. மேலும், வியாபாரத்தை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சில நிறுவனங்கள் பம்பர் பரிசுகள், கேஷ் பேக் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்றன. இதுபோன்ற விளம்பரங்கள் சில நேரங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிர்மறையாக மாறிவிடும். அப்படி ஒரு சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

Five things to consider before buying property with your wife as co-owner

சீனாவின் ட்ரைஜென் நகரில் உள்ள பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சமீபத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில் “எங்கள் நிறுவனத்தில் வீடு வாங்கினால் உங்களுக்கு மனைவிக்கு இலவசம்” என்ற வாசகம் உள்ளது. இந்த விளம்பரம் சமூக வலைதளங்கள் மற்றும் வால் போஸ்டர்கள் மூலம் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நான் வீடு வாங்கினால் மனைவி இலவசமா? இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அரசு ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த விளம்பரத்தை மக்கள் தவறாக புரிந்து கொள்கின்றனர். அதாவது, தங்கள் முயற்சியில் உங்கள் மனைவிக்கு வீடு வாங்கிக் கொடுங்கள் என்ற பொருளில் இந்த விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web