சத்துணவு கூட மேற்கூரை இடிந்து விழுந்து சமையலர் படுகாயம்!!

 
சாந்தி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே  பாலூர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு  வருகிறது. இந்தப் பள்ளியில்  சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து  வருகின்றனர்.  அப்பள்ளியில் அமைந்துள்ள சத்துணவு கூடத்தில் வழக்கம் போல் இன்று காலை சாந்தி என்ற சத்துணவு பணியாளர் மாணவர்களுக்கு உணவு சமைத்து கொண்டிருந்தார்.

சாந்தி

அப்போது சத்துணவு கூடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து பணியாளர் சாந்தியின் தலையில் விழுந்தது. இதனால் சாந்தி அலறி கூச்சலிட்டார். இடிந்து விழுந்த மற்றும் சாந்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

சாந்தி

இடிபாடுகளில் சிக்கியிருந்த சாந்தியை மீட்டு பன்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் சாந்தி  படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடலூரில் நள்ளிரவு பெய்த மழையால் கட்டிடம் சேதம் அடைந்திருக்கலாம் அதனல் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web