பயிற்சிக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து கோர விபத்து... 5 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி!
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் ஹஃபீஸாபாத் நகரில் செயல்பட்டு வந்த ஒரு பயிற்சிக் கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சிக் கூடத்தின் மேற்கூரை சனிக்கிழமை செப்டம்பர் 20ம் தேதி சனிக்கிழமை பெயர்ந்து விழுந்ததில் அந்தக் கட்டடத்தின் உள்ளே இருந்த 9 குழந்தைகளும் இரு ஆசிரியர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க போராடினர். அதில் 3 குழந்தைகள் உயிர் பிழைத்தனர். எனினும், பிறர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி 5 குழந்தைகள் உட்பட 7 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக விபத்துக்குள்ளான கட்டடத்தின் கட்டுமானம் சிதிலமடைந்திருந்ததாகவும் அதைச் சீரமைக்காமல் விட்டதே, கூரை இடிந்து விழ காரணம் எனவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
