அலறிய பெண்கள்... கொடைக்கானல் மலை ரோட்டுல அந்தரத்துல தொங்கிய கார்!

 
கொடைக்கானல் விபத்து

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் இருந்து கொடைக்கானலுக்கு பெண்கள் உட்பட 6 பேர் சுற்றுலா சென்றிருந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு காரில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் புறப்பட்டனர். நேற்று அதிகாலை வத்தலக்குண்டு - கொடைக்கானல் மலைச்சாலையில் பெருமாள்மலை அருகே சென்றுக் கொண்டிருந்த போது, இவர்களது கார் மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயன்றது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த தனியார் விடுதி வளாக சிறிய தடுப்புச்சுவர் மற்றும் விளம்பர பலகை மீது மோதி மலைச்சாலையில் அந்தரத்தில் தொங்கியது. காருக்குள் இருந்தவர்கள் அலறிக் கூச்சலிட்டனர்.

கொடிக்கானல் விபத்து

இவர்களின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், காரில் இருந்த 6 பேரையும் பத்திரமாக மீட்டனர். இது குறித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு சுவரை கார் தாண்டாமல் அந்தரத்தில் தொங்கி நின்றதால் அதிர்ஷ்டவசமாக 6 பேரும் உயிர் தப்பினர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?