கோழிக்கறியில் விஷம் வைத்து பெற்றோரை கொலை செய்த மகன்!! பகீர் வாக்குமூலம்!!

 
மஞ்சுநாத்

கர்நாடாக மாநிலம், ஹாசன் மாவட்டம் பிலஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் நஞ்சுண்டப்பா. இவருடைய மனைவி உமா. இவர்களின் மகன்  மஞ்சுநாத். இவர் ஆகஸ்ட் 15ம் தேதி காலை கோழிக்கறி உணவை உமா தயார் செய்தார். அதைச் சாப்பிட்ட நஞ்சுண்டப்பா, உமா, மஞ்சுநாத்  மூவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியக  மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சையில் இருந்த மஞ்சுநாத், 2  நாட்களுக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதே நேரத்தில்   அவரின் பெற்றோர் ஆகஸ்ட் 23ம் தேதி சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தனர்.  

ஆம்புலன்ஸ்

தனது பெற்றோருக்கு கிராமத்தினருடன் சேர்ந்து இறுதிச்சடங்கு செய்வதற்கான வேலையில் மஞ்சுநாத் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அங்கு சென்ற காவல்துறையினர்  நஞ்சுண்டப்பா, உமா ஆகியோரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனை அறிக்கையில், நஞ்சுண்டப்பா, உமா இருவரும் விஷம் குடித்ததால் உயிரிழந்ததாக கூறப்பட்டது.இதனால்  கிராம மக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.  மஞ்சுநாத் மீது சந்தேகம் கொண்ட காவல்துறையினர்   அவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

சிறுவன் கைது

அதில் அப்போது தாய், தந்தைக்கு மாமிச உணவில் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார்.   மாமிச உணவு சாப்பிட்ட தினத்தில்   தாய், தந்தையோடு மஞ்சுநாத்தும் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்தது.  பிலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விதவை ஒருவரை மஞ்சுநாத் திருமணம் செய்ய விரும்பியுள்ளார். ஆனால், விதவையைத் திருமணம் செய்யக்கூடாது என நஞ்சுண்டப்பா, உமா இருவர்ம்  திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆத்திரமடைந்த மஞ்சுநாத், தனது பெற்றோரை விஷம் வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து  மஞ்சுநாத்தை போலீஸார் கைது செய்தனர்.விதவையை திருமணம் செய்து கொள்வதற்காக தனது பெற்றோரை மகனே விஷம் வைத்து கொலை செய்த சம்பவம்   பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web