அப்பாடா... புயல் ஆந்திராவுக்கு சென்றது... தப்பித்த தமிழகம்.. !!

 
புயல்

சென்னை- மசூலிப்பட்டினம் இடையே புயல் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் 5ம் தேதி ஆந்திராவில்   நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு சுமார் 780 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே சுமார் 940 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

புயல்


இது குறித்து  மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். அதனைத் தொடர்ந்து  டிசம்பர் 3ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். பின்னர் இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வடதமிழக கடலோரப் பகுதிகளில் சென்னைக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே, டிசம்பர் 4ம் தேதி மாலை கரையைக் கடக்கக்கூடும்" என கூறப்பட்டிருந்தது.

புயல்
அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில், நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்   டிசம்பர் 3ம் தேதி புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயல் டிசம்பர்  5ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தலைநகர் சென்னைக்கு இருந்த புயல் ஆபத்து நீங்கியுள்ளது. ஆனால் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web