புரட்டிப் போட்ட புயல்... இன்றும் 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

 
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!! தடுமாறும் குடிமகன்கள் !!

சென்னை உள்ளிட்ட 4  மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் புரட்டிப் போட்டுள்ள நிலையில், கனமழை மற்றும் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புயல் கடந்து சென்றுள்ள நிலையில், சென்னை வெள்ளக்காடாக மிதக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மிக்ஜாம் புயல் கோரத்தாண்டவமாடி சென்றுள்ள நிலையில், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. 

புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. பல பகுதிகளில் இன்னும் மின்சார சப்ளை சீராகாத நிலையில், இன்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும் இன்றும் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கனமழை காரணமாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

பொதுமக்கள் இன்றும் சென்னை கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைப்பெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே போன்று பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் துரித வேகத்தில் சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இன்று நிவாரண பொருட்கள் வழங்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web