புரட்டிப் போட்ட புயல்... சென்னையில் முடங்கியது போக்குவரத்து... இன்று புறநகர் ரயில்கள் முற்றிலும் ரத்து!

 
கல்லூரி மாணவர்களுக்குள் மோதல்…!! “நீங்க போட்ட உயிர் பிச்சையில வாழ விரும்பல…” உருக்கமாக பேசி ரயில் முன்பு பாய்ந்த மாணவர்!!

சென்னையை புரட்டி போட்டு கடந்திருக்கிறது மிக்ஜாம் புயல். சென்னையில் இன்று கனமழை காரணமாக பல பகுதிகளில் இன்னும் வடியாமல் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், புறநகர் ரயில்கள் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

நேற்று சென்னையில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில், சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் முழுமையாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில், இன்னும் முழுவதுமாக வெள்ளம் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. முழுமையாக வெள்ள வடிய இன்னும் 20 நேரத்திற்கு மேலாகும் என கூறப்படுகிறது.  இதனால் சென்னையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில்

கடுமையான மழை பெய்து கொண்டிருந்த நிலையிலும் நேற்று ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் என்ற விகிதத்தில் புறநகர் மின்சார ரயில்கள்  இயக்கப்பட்டன. ஆனாலும், தண்டவாளங்கள் தெரியாத அளவிற்கு பல இடங்களில் மழைநீர் தேங்கி இருந்தது.  மிக மெதுவாக ரயில்கள் இயக்கப்பட்டன. 

இந்த நிலையில் இன்று புறநகர் ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீர் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மெட்ரோ பறக்கும் ரயில்

ஏற்கெனவே சாலைகளில் அதிக அளவு நீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து  குறைக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளும் மிகக் குறைந்த அளவில் தான் இயக்கப்பட்டன.  இந்த நிலையில் இன்று மின்சார ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதால்  மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படும். 

 ஆனாலும் ஆறுதல் அளிக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள்  வழக்கம் போல் இயக்கப்படும் என்றும், ஞாயிறு அட்டவணையில் அவை இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web