அடுத்தடுத்து மயங்கி விழுந்த மாணவர்கள்... அரசு விடுதியில் உணவில் விஷத்தன்மையால் 52 மாணவர்கள் பாதிப்பு!

 
உணவு

அரசு விடுதியில் தங்கி படித்து வந்த மாணவர்கள் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் என்று பாதிப்பிற்குள்ளானது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கானா மாநிலம், ஜோகுலாம்பா கதவால் மாவட்டத்தில், தா்மாவரம் பகுதியில் உள்ள அரசு விடுதி ஒன்றில் தங்கியிருந்த 52 மாணவர்கள், விடுதியில் பரிமாறப்பட்ட உணவின் விஷத்தன்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு உணவருந்திய அடுத்த சில மணிநேரங்களுக்குள், மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி, தலைச்சுற்றல் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மருத்துவமனை

சிகிச்சை பெற்ற மாணவர்களில் பெரும்பாலோர் தற்போது நலம் பெற்றுள்ளனர். மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்ததாவது, 32 மாணவர்கள் ஏற்கனவே வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள மாணவர்களும் மருத்துவர்களின் கண்காணிப்பில் நலமாக உள்ளனர். மேலும், விடுதியிலேயே ஒரு தற்காலிக மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

மருத்துவமனை

மாணவர்கள் வெள்ளிக்கிழமை இரவு சாதம், சாம்பார், முட்டைக்கோஸ் கூட்டு ஆகியவற்றை உணவாக எடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து தெலங்கானா மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே விசாரணை தொடங்கி  24ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க மாநில தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!