கரும்புச்சாறு கடைக்கு ஆட்கள் தேவை.. ’கல்வித் தகுதி BE, BA, BSC'.. பேனர் வைத்த கடை உரிமையாளர்!

 
கரும்புச்சாறு கடை

வேலைக்கு ஆட்களே தேடுவது இக்காலத்தில் சவலான ஒன்று தான். தகுந்த  நபரை பணியமர்த்த உரிமையாளர் போராடுவார்கள்.. அதை போல், இக்காலத்தில் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதே மிகவும் கடினாமாக ஒன்றாக உள்ளது. அந்த வகையில், வேலைக்கு ஆட்கள் தேவை என ஒருவர் பேனர் வைத்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. அது என்ன என்பதை பார்ப்போம்.. 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மெய்ஞானபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட கரும்புச்சாறு கடையில் வைக்கப்பட்டுள்ள பேனர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த பேனரில் கரும்புச்சாறு கடைக்கு ஆட்கள் தேவை, சம்பளம் 18,000 ரூபாய், வேலை நேரம் காலை 8.30 மணி முதல் இரவு 9.30 மணி என எழுதப்பட்டுள்ளது. கல்வித் தகுதி BE, BA, BSC என குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் வயது வரம்பு 25 முதல் 40 ஆண்டுகள். கடை உரிமையாளர் தொடர்பு கொள்வதற்காக தனது தொடர்பு எண்ணையும் பதிவிட்டுள்ளார். இந்த பேனர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web