பள்ளி மாணவிகளின் தலையை பாதி மொட்டையடித்த ஆசிரியர்!! ஹிஜாப் சரியாக அணியாததால் ஆத்திரம்!!

இந்தோனேசியாவில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஆகஸ்ட் 28ம் தேதி நேற்று இஸ்லாமிய பெண்களில் சிலர் ஹிஜாப் சரியாக அணிந்து வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி ஆசிரியர் சரியாக ஹிஜாப் அணியாத 14 இஸ்லாமிய மாணவிகளின் தலையின் ஒரு பகுதியை மட்டும், மொட்டை அடித்துள்ளார்.
இந்தோனேஷியாவில் 27 மில்லியன் மக்கள் வசித்து வரும் கன்சர்வேட்டிவ் பகுதியில் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் 2021 முதல் இதுபோன்ற கட்டாய ஆடை விதிமுறைகளை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஹிஜாப் சரியாக அணியாததால் மாணவிகளுக்கு மொட்டையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து ஆசிரியர் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அத்துடன் குறிப்பிட்ட ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பல அமைப்புகளும் கோரிக்கை விடுத்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாகவும் தலைமை ஆசிரியர் ஹார்டோ தெரிவித்துள்ளார்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!