செல்போன் பார்த்த போது விபரீதம்... 30கி. தங்கச் சங்கிலியை அறுத்து சென்ற திருடன்... பகீர் சிசிடிவி காட்சிகள்!
கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவின் மஹாலட்சுமி லேஅவுட் பகுதியில் சமீபத்தில் நடந்த தங்க செயின் பறிப்பு சம்பவம் நடந்து மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 40 வயது பெண் ஒருவர் விநாயகர் கோவிலுக்கு சென்று, மாலை நேரத்தில் பக்தர்கள் பாடல் பாடிக் கொண்டிருந்தார்.
Share this video with your family members and please ask them to be careful about these chain snatchers. pic.twitter.com/21UynXo2zO
— yaarivanu_unknownu (@memesmaadonu) October 14, 2024
அப்போது ஜன்னலோரம் நின்று செல்போனில் எதையோ பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத வகையில் திருடன் அவரது கழுத்தில் இருந்த 30 கிராம் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடி விட்டான்.
அதிர்ச்சி அடைந்த பெண் திருடன் செயினை பறித்துச் சென்றதாக அலறியவுடன், அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. திருடன் விரைவாக தப்பி ஓடி விட்டதால் உடனடியாக காவல்துறையிடம் புகார் அளித்தார். காவல்துறையினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
