மூன்றாவதும் பெண் குழந்தை.. ஆத்திரத்தில் கொடூரமாக குத்திக் கொன்ற தந்தை கைது!

 
ராஜ்குமார்

சென்னை வியாசர்பாடி சுந்தரம் நான்காவது தெரு பகுதியை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் (38), விஜயலட்சுமி. இவர்களுக்கு ஐந்து மற்றும் இரண்டரை வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மாத இறுதியில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. கடந்த 7ம் தேதி காலை விஜயலட்சுமி குளித்துவிட்டு வெளியே வந்தார். பிறந்து ஒன்பது நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்த்துள்ளார்.

குழந்தை

ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 9ம் தேதி குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பிரதிஷ்தா புகார் அளித்தார். புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தையின் தந்தை ராஜ்குமார்  குழந்தையை மூன்று முறை கத்திரியால் குத்தியது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில், மூன்றாவதும் பெண் குழந்தை  பிறந்ததால் ஆத்திரத்தில் குழந்தையை கொன்றதாக ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து வியாசர்பாடி போலீசார் ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!