ரஜினியின் காளி பட தயாரிப்பாளர் பாபுஜி மரணம்! திரையுலகினர் அஞ்சலி!

 
பாபுஜி

திரைப்பட தயாரிப்பாளர் ஹேம் நாக் (76) உடல்நலக் குறைவால் காலமானார். 

திரையுலகினருக்கு இது போதாத காலம் என்றே சொல்லவேண்டும். திரையுலகில் அண்மைக்காலமாக அடுத்தடுத்து இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. மூத்த இயக்குநகர்கள் ஷண்முகப்பிரியன், கே.விஸ்வநாத், வாரிசு படத்தின் கலை இயக்குநர் சுனில் பாபு இவர்களின்  மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கடந்த வாரத்தில் பிரபல பிண்ணனி பாடகி வாணி ஜெயராம்,இயக்குநரும், நடிகருமான டி. பி. கஜேந்திரன் ஆகியோரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது திரைப்பட தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி உயிரிழந்தார். 

பாபுஜி

ரஜினிகாந்த் நடித்த காளி மற்றும் கர்ஜனை ஆகிய படங்களை ஹேம் நாக் பாபுஜி தயாரித்துள்ளார். தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளராக வலம் வந்தவர் பாபுஜி. அதேபோல் கின்னஸ் சாதனைக்காக தமிழில் தயாரான சுயம்வரம் திரைப்படத்தையும் தயாரித்தார். இந்த திரைப்படம் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் சாதனையை நிகழ்த்தியது. சினிமா தயாரிப்பு தவிர, திரைப்பட விநியோகம் மற்றும் பைனான்ஸ் ஆகிய துறைகளிலும் பாபுஜி செயல்பட்டு வந்தார்

​பாபுஜி

இதுபோன்று முக்கிய நடிகர்கள் பலரின் படங்களை தயாரித்துள்ளார். அண்மைக்காலமாக திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்தார். திரைப்படத் தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி மறைவுக்கு தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த தொழில் அதிக லாபம் தரும்

From around the web