பழைய ஆட்டு இறைச்சி சாப்பிட்டதால் நேர்ந்த சோகம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி!

சமீபகாலமாக உணவு தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வந்தே பாரத் ரயில், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் உணவுகள், பிரபல உணவகங்களின் சாப்பாடுகள் கெட்டு போவதும், தூய்மையின்மை காரணமாகவும் பெரும் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இதனால் பலர் உடல் உபாதைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன.
இந்நிலையில், கர்நாடக மாநிலம், ராய்ச்சூர், சிவ்வார் தாலுகா கல்லூர் கிராமத்தில் ஆட்டு இறைச்சியை சாப்பிட்ட தம்பதி, மகன், மகள் ஆகியோர் உணவு விஷம் தாக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்களது மற்றொரு மகன் ஆபத்தான நிலையில் உள்ள நிலையில், சிகிச்சை பெற்று வருகிறான். புதன்கிழமை காலை பழைய ஆட்டு இறைச்சி உணவை சாப்பிட்ட பிறகு வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பீமன்னா (60), அவரது மனைவி ரம்மா (54), மகன் மல்லேஷ் (19), மகள் பார்வதி (17) ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 2) உயிரிழந்தனர் என கண்டறியப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா