சோகம்.. பிரிந்து சென்ற காதல் மனைவி.. மனமுடைந்த தேசிய கபடி வீரர் தற்கொலை..!
கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு தாலுகா, தெகுரு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் ராஜ் அரஸ். தேசிய கபடி வீரரான வினோத், ஒரு பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில் வினோத் ராஜ் அரஸ் அந்த பெண்ணை 2023 டிசம்பர் 10ம் தேதி திருமணம் செய்தார்.இந்நிலையில் அவரது மனைவி டிசம்பர் 31ம் தேதி வினோத்தை பிரிந்துள்ளார். இதனால் வினோத் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இந்த சம்பவம் குறித்து மகிளா காவல் நிலையத்தில் டிச., 31ல் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் வினத் ராஜ் அரஸ் திருமணத்தில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மனைவி பிரிந்த சோகத்தால் வினோத் ராஜ் அரஸ் கடந்த வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து அவர் மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று இரவு அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே மாதத்தில் காதல் மனைவி பிரிந்து சென்ற தேசிய கபடி வீரர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க