வெடித்து சிதறிய பட்டாசு ஆலை.. விபத்தில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்..!
பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
விருதுநகர் அருகே உள்ள வச்சக்காரப்பட்டியில் முருகேசனுக்கு சொந்தமான நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அங்கீகாரம் பெற்ற தாளமுத்து பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று பட்டாசு ரசாயன மூலப்பொருட்களை கலக்கும்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
3 அறைகள் தகர்க்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன. இந்த விபத்தில், அறையில் பணிபுரிந்த முதலிப்பட்டியை சேர்ந்த வீரகுமார், கன்னேசேரி புதூரை சேர்ந்த காளிராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சரவணக்குமார், சுந்தரமூர்த்தி ஆகியோர் 90 சதவீத தீக்காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி காயமடைந்தவர்களை மீட்டனர். சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க