அதிர்ச்சி... தறிகெட்டு வீட்டுக்குள் புகுந்த லாரி.... ஒருவர் பலி... 3 பேர் படுகாயம்!!
திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரம் ஏடி காலனி பகுதியில் வசித்து வருபவர் ஜஸ்டின். இவருக்கு வயது 38. இவர் கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவரது மகன்கள் ரித்திக், ரியோத் இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணிக்கு மைசூருவில் இருந்து தேனிக்கு அரிசி லோடு ஏற்றிக் கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது.
லாரி திண்டுக்கல், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தோமையார்புரத்தில் லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இதில் ஒரு வீட்டில் புகுந்து இடித்து நின்றது. இந்த விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜஸ்டின் கட்டிட ஈடுபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருடன் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவியும், குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்த ஜஸ்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தூங்கிக்கொண்டிருந்த வீட்டிற்குள் லாரிபுகுந்து விபத்து ஏற்பட்டு ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் அடைந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!