அமெரிக்க அதிபர் தேர்தலில் திடீர் திருப்பம்... விவேக் ராமசாமி விலகல்... டிரம்பை ஆதரிக்க முடிவு!

 
அமெரிக்கா விவேக் ராமசாமி

அமெரிக்க அதிபர் தேர்தலில் திடீர் திருப்பம் ஏற்பட்டதால் பரபரப்பு உருவாகியுள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த குடியரசு கட்சியின் வேட்பாளர் விவேக் ராமசாமி திடீரென வேட்பாளர் தேர்வு போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், விவேக் ராமசாமி, தான் போட்டியில் இருந்து விலகுவதோடு, அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப்பை அதிபராக்குவதற்காக தான் பணியாற்றப் போவதாகவும் அறிவித்துள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளார். 

இந்த வருடத்தின் இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்காவில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி இடையே அதிபர் தேர்தலுக்கான கடுமையான போட்டி நிலவி வருகிறது. தற்போது ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அதிபராக உள்ளார்.


இந்நிலையில் வரவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்யும் போட்டி சூடுபிடித்துள்ளது. குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயதான இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில் முதல் மாகாணமாக, ஐயோவா-வில் குடியரசு கட்சியில் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான போட்டியில் டொனால்டு டிரம்ப்புக்கும், விவேக் ராமசாமிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பரபரப்பான உள்கட்சி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தல் முடிவுக்கு முன்னதாக டிரம்ப் வெளியிட்ட பிரசார வீடியோ ஒன்றில், “என்னுடைய ஆதரவாளர் எனக் கூறி விவேக் ராமசாமி செய்வதெல்லாம் ஏமாற்று பிரசார தந்திரங்களின் வடிவமாக உள்ளது.

டொனால்டு டிரம்ப், விவேக் ராமசாமி.

அவர் மிகவும் தந்திரமாக செயல்படுகிறார். விவேக்கிற்கு வாக்கு அளிப்பது எதிர் அணிக்கு வாக்களிப்பது போன்றதாகும். இதை நம்பி ஏமாந்து விடாதீர்கள்” என கூறியிருந்தார்.

விவேக் ராமசாமி டிரம்ப்பை பாராட்டியே பிரசாரங்களை செய்து வந்தார். ஆனால் டிரம்ப், விவேக் ராமசாமியை ஏமாற்று பேர் வழி என்ற ரீதியில் விமர்சித்து பிரசாரத்தை மேற்கொண்டார்.

இந்நிலையில், ஐயோவா மாகாணத்தில் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திடீர் திருப்பமாக குடியரசு கட்சி அதிபர் வேட்பாளருக்கான போட்டியிலிருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். மேலும், "டொனால்ட் டிரம்ப் அதிபராக வருவதற்கு பணியாற்ற உள்ளேன்” எனவும் அவர் தெரிவித்துளது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web