பேருந்து மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்த வேன்... 10 பேர் படுகாயம்!!

 
விபத்து

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் அரசுப் பேருந்து மீது வேன் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த கோர  விபத்தில்  10 பேர் படுகாயம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டுப்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் பணி முடிந்து வேனில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.  இந்த வேனை வத்தலகுண்டுவில் வசித்து வரும்   ரமேஷ் ஓட்டி வந்தார்.  

விபத்து
இந்நிலையில் திண்டுக்கல் - வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையில் மருதாநதி பாலத்தில் வேனுக்கு எதிரே நாய் ஒன்று குறுக்கே வந்தது.  நாய் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் வேனை திருப்பினார்.  கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியது. பின்னர் வேன் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் ரமேஷ் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆம்புலன்ஸ்
பேருந்தில் இருந்த பெண்பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும்   காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web