பகீர் வீடியோ... லாரிக்கிடையே சிக்கி தம்பதி சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

 
லாரி

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தறிகெட்டு ஓடி வந்த லாரி, போக்குவரத்து காரணமாக முன்னால்  நின்றிருந்த லாரியின் பின்னார், நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பின்னாலிருந்து வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இரு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த கணவன் மனைவி மீது லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால், மோதியது. இதில், இரண்டு லாரிகளுக்கும் இடையே இருசக்கர வாகனம் சிக்கி விபத்துக்குள்ளானது. 


இந்த கோர விபத்தில் கணவன், மனைவி இருவருமே லாரிக்கடியில் சிக்கி உடல் நசுங்கி  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

லாரி

விபத்து நேர்ந்ததும் அருகில் இருப்பவர்கள் உடனடியாக ஓடிச் சென்று லாரிக்கடியில் இருந்து இரு குழந்தைகளையும் லேசான காயங்களுடன் காப்பாற்றினார்கள். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web