பகீர் வீடியோ வைரல்.. நடுரோட்டில் அசால்டாக காரின் கதவை திறந்த பெண்..!

 
பெங்களூரு கார்

கர்நாடகாவில் சாலையில் சென்று கொண்டிருந்த வாடகை கார் ஒன்று நடுரோட்டில் நின்றது, பின் உள்ளே இருந்த பெண் திடீரென கார் கதவை திறந்தார். அப்போது பின்னால் வந்த ஆட்டோ காரின் கதவை மோதியது. ஆட்டோ டிரைவர் உடனடியாக பிரேக் போட்டு நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆட்டோ டிரைவர் கீழே இறங்கி ஆட்டோவில் சேதம் ஏற்பட்டதா என ஆய்வு செய்தார்.


பின் காரில் இருந்து இறங்கிய பெண் எதுவும் நடக்காதது போல் கார் கதவை மூடிவிட்டு நடந்தாள். இதை பார்த்த ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணை பார்த்து கையை நீட்டி ஏதோ சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறி சென்று விட்டார். இதற்கிடையில், அந்த பெண் வந்த காரின் கதவும் சேதமடைந்து, சரியாக பூட்டப்படவில்லை.

இந்த சம்பவம் மற்றொரு காரின் டேஷ்போர்டு கேமராவில் பதிவாகி அதை எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது. கார் டிரைவர் மற்றும் பெண் இருவரையும் குற்றம் சாட்டி பலர் கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டனர். சிலர் கதவைத் திறப்பதற்கு முன் பயணிகளை டிரைவர் எச்சரித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். பெரும்பாலானோர் அந்த பெண்ணின் கவனக்குறைவான செயலை விமர்சித்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web