பகீர் வீடியோ... மருத்துவமனை டீனை கழிவறையை சுத்தம் செய்ய சொன்ன எம்பி... !!

 
ஹேமந்த் பாட்டீல்

மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்பட்டு வரும்    ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 48 மணிநேரத்தில் 31 நோயாளிகள்  அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.    அம்மருத்துவமனையின் தற்காலிக டீன் மருத்துவர் ஷ்யாம் வகோடேவை கழிவறையை சுத்தம் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.   அவர் கொடுத்த புகாரின் பேரில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே   எம்.பி., ஹேமந்த் பாட்டீல் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மகாராஷ்டிரா மருத்துவ சேவை நபர் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் ஆகியவைகளின் கீழ்   வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.


 
இதனையடுத்து  தற்காலிக டீன் வகோடே அரசு மருத்துவமனையின் அசுத்தமான கழிவறை மற்றும் சிறுநீர் கழிக்கும் அறைகள் சுத்தம் செய்ய வேண்டும் என கட்டளையிட்டார். அதன்படியே அவர் சுத்தம் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் மருத்துவமனை டீனிடம் துடைப்பத்தைக் கொடுத்து கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தும் பாட்டீல், "இங்கு ஒரு சிறிய தண்ணீர் கோப்பை கூட இல்லை. ஆனால் கழிவறையைப் பயன்படுத்தாதவர்களை   திட்டுகிறீர்கள். உங்கள் வீட்டிலும் இப்படிதான் நடந்து கொள்வீர்களா" என்று கேட்கிறார்.  இதுகுறித்து சிவசேனா எம்.பி., "அரசு கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்கிறது ஆனால் அரசு மருத்துவமனையில் மிக அவலமான நிலையே நிலவி வருகிறது.  கழிவறைகள் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படவில்லை. மருத்துவமனை வார்டுகளில் இருக்கும் கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளன. தண்ணீரும் வரவில்லை" எனக் கூறியுள்ளார்.  

 

 

ஹேமந்த் பாட்டீல்


எம்.பி பாட்டீலின் செயலை மகாராஷ்டிரா மாநில மருத்துவர்கள் சங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும் எம்.பி., நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.   இதுகுறித்து மருத்துவர்கள் சங்கம் "அனைவரின் முன்னிலையில் மருத்துவமனை டீன் கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியுள்ளார். இவையெல்லாம்  அரசியல் ஆதாயத்துக்காக தான்  நிகழ்த்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்களும், மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களும் நம்பிக்கையற்றும், மிகுந்த விரக்தியிலும் இருக்கின்றனர்.  

மருத்துவமனையில் இருக்கும் பற்றாக்குறைகளில் நோயாளிகளை கவனித்துக் கொள்வதில் எவ்வளவு சிறப்பான முயற்சிகளை மருத்துவர்கள் செய்து வருகின்றனர்.   தரமான மருத்துவ சேவையை வழங்குவதில் நிர்வாகத்தின் தோல்விக்கு மருத்துவர்கள் பலியாக்கப்படுகிறார்கள். அரசு மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த உயிரிழப்புகளுக்கு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறையே காரணம்" எனத்  தெரிவித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web