பகீர் வீடியோ... சீட்டுக்கட்டாய் சரிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்... அலறிய மக்கள்!

 
கட்டிட விபத்து

ஆந்திரா மாநிலத்தில், புதிதாக கட்டப்பட்டு வந்த 3 மாடிகளைக் கொண்ட தங்கும் விடுதி ஒன்று, திடீரென சீட்டுக்கட்டைப் போல இடிந்து சரிந்து கீழே விழுந்தது. இந்த 3 மாடி கட்டிடம் இடிந்து விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் டோர்னா எனும் இடத்தில் இன்று அதிகாலை புதிதாக கட்டப்பட்டு வரும் மூன்று மாடிகளைக் கொண்ட லாட்ஜ்  ஒன்று இடிந்து விழுந்தது. லாட்ஜ் மேலாளர் உடனடியாக கவனத்துடன் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


ஸ்ரீசைலம் செல்லும் வழியில் பருச்சூரி சுப்பாராவ் என்பவருக்கு சொந்தமான வாசவி லாட்ஜ் கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிடத்தை ஒட்டி, புதிய கட்டிடம் கட்ட, உரிமையாளரின் சகோதரர் ராமராவ், 10 அடி ஆழத்திற்கு அஸ்திவாரம் தோண்டினார். பக்கத்து லாட்ஜ் கட்டிடத்தின் அஸ்திவாரம் போதிய ஆழமில்லாததால் பக்கத்து பகுதியில் தோண்டப்பட்ட அடித்தள குழிக்குள் கட்டிடம் இடிந்து விழுந்தது.

Andhra

கட்டிடம் இடிந்து விழும் என்று எவருக்கும் சுப்பாராவ் லாட்ஜ் அறைகளை வாடகைக்கு விடவில்லை. முன்னதாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web