பகீர் வீடியோ... ரூ.2 கோடி கொடுத்து சேர்மன் ஆனோம்... ஷேர் எல்லாம் தரமுடியாது... அதிர வைத்த திமுக சேர்மன்!

 
திமுக சேர்மன்

ரூ.2 கோடி வரை செலவழித்திருக்கிறோம். ஒவ்வொரு கவுன்சிலருக்கும் ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் என கொடுத்து தான் சேர்மன் ஆகியிருக்கிறோம் என்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி திமுக சேர்மன்,  பணம் கொடுத்துத் தான் சேர்மனாக ஆனதாக அவரது தங்கை பேசும் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


பல மாவட்டங்களில் திமுகவை சேர்ந்தவர்களுக்குள்ளேயே போட்டி போட்டுக் கொண்டு சம்பாதிப்பதிலும், டெண்டர் போன்றவைகளில் பங்கு பிரிப்பதிலும் தகராறு எழுந்து வருகிறது. இது அவ்வப்போது சமூக வலைத்தளங்களிலும் வீடியோவாக வெளியாகி, எதிர்கட்சியினரிடையேயும் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நெல்லை மாநகராட்சியில் திமுக மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே போராட்டம் நடத்தியது சர்ச்சையான நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி திமுக சேர்மனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கமிஷன் பிரிப்பதில் மோதல் ஏற்பட்டது. இதில் சேர்மனின் தங்கை ஹமிதா, திமுக கவுன்சிலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த காணொலியில்,சேர்மனின் தங்கை ஹமிதா, ஒவ்வொரு கவுன்சிலருக்கும் ரூ.10 லட்சம், 20 லட்சம் கொடுத்து சேர்மன் ஆயிருக்கோம். மாவட்ட செயலாளர், தலைவர் என்று அனைவருக்கும் பணம் கொடுத்து கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் வரையில் செலவழிச்சு இருக்கேன். கமிஷனை யாருக்கும் பிரித்து கொடுக்க முடியாது என்று மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார். 

வாக்குவாதம்

கவுன்சிலர்களுக்கு பணம் கொடுத்துத்தான் சேர்மனானதாக அவரது தங்கை  ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ள நிலையில்  கீழக்கரை திமுக சேர்மன் மீது நடவடிக்கை எடுத்து இவரை தகுதி இழப்பு செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web