வைரல் வீடியோ... நள்ளிரவில் திரண்ட கிராம மக்கள்....சமாதானம் செய்து உறுதி அளித்த நிதி அமைச்சர்... !!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள லாந்தை கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதையை லாந்தை, கண்ணணை,பெரிய தாமரைக்குடி, சின்னதாமரைக்குடி, திருப்பனை உள்ளிட்ட கிராமங்கள் உட்பட 600 குடும்பங்களை சேர்ந்த 2500 மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலம் வந்தாலே அந்த ரயில்வே சுரங்கப்பாதை நீரில் மூழ்கி விடுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
நள்ளிரவில் நிதி அமைச்சரிடம் கோரிக்கை மனு ...!! pic.twitter.com/Cyd6FfKNDZ
— Dina Maalai (@DinaMaalai) November 19, 2023
ரயில்வே சுரங்கபாதை நீரில் மூழ்கி விடுவதால் தாங்கள் தொடர்ந்து சிரமத்திற்கு உள்ளாவதாகவும், அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கும், நோயாளிகளை ஆம்புலன்ஸ் வாகனத்தில் கூட ஏற்றி செல்வதற்கு கூட சிரமப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் , வெளியூரில் கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அந்த நேரத்தில் ஏற்படும் திடீர் உயிரிழப்புக்களால் அவர்களை அவர்களை அடக்கம் செய்வதற்கு சிரமப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட மாநில, மத்திய ரயில்வே என அனைவருக்கும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாகவும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் சென்றிருந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இது குறித்து அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அவரிடம் அளிக்கப்பட்ட மனுவில் ரயில்வே சுரங்கப்பாதையை ஆள் உள்ள கேட்டாகவோ அல்லது மேம்பாலமாகவோ தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட மத்திய நிதி அமைச்சர் அதற்கான பணிகளை விரைவாக செய்து தருகிறேன் என கிராம மக்களிடம் உறுதி அளித்தார். அதனைத்தொடர்ந்து பாலத்தையும் பார்வையிட்டு சென்றார். நிர்மலா சீதாராமனின் இந்த செயலுக்கு லாந்தை, கண்ணனை கிராம மக்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர்.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!