இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் முகாம் முடிந்தது... ஆர்வமாக குவிந்த கல்லூரி மாணவிகள்!

 
வரைவு வாக்காளர் பட்டியல்

இன்று நவம்பர் 26ம் தேதி, திருவண்ணாமலைத் தவிர்த்து தமிழகம் முழுவதும் வாக்காளர் பெயர் திருத்த, புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு முகாம் நடைப்பெற்று முடிந்தது. இந்த சிறப்பு முகாமில் புதிதாக வாக்களிக்க இருக்கும் 18 வயது நிரம்பிய மாணவிகள், பெண்கள் அதிகளவில் ஆர்வமுடன் ஆவணங்களைக் கொண்டு வந்து, தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, பெயரைத் திருத்துவது, முகவரி  மாற்றுவது போன்ற பணிகளை இன்று மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு, சிறப்பு முகாம் நடத்தப்பட்ட நிலையில், திருத்தங்கள் மேற்கொள்வதற்கும், பெயர் சேர்ப்பதற்கும் நிறைய பேர் ஆர்வமுடன் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொண்டனர். 

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் திருத்தங்கள் அதாவது பெயர் மாற்றம் முகவரி மாற்றம் மற்ற பல திருத்தங்கள் இருப்பின் அதனை சிறப்பு முகாம்கள் மூலம் சரி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

ஆதார், வாக்காளர் அட்டை

இந்த புதிய அட்டவணைபடி .வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.  சீரான இடைவெளியில்இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் கூறப்பட்ட நிலையில் நேற்றும், இன்றும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. 

தமிழக வாக்காளர் பட்டியலில் இந்தி மொழியில் அச்சான பெயர்கள்!! சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம்!!

இந்த சிறப்பு முகாம்கள் மூலம்  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விண்ணப்பித்திருந்தனர். கடந்த முறை நடைப்பெற்ற சிறப்பு  முகாம்களின் மூலமாக மட்டும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 15,187 பேர் விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

From around the web