பகீர்... லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி!! உறவினர்கள் மறியல்!!

 
ரேவதி

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி  நசரத்பேட்டை யமுனா நகர் பகுதியில் வசித்து வருபவர் ரேவதி.   இவர் பூந்தமல்லி - பாரிவாக்கம் சாலை சந்திப்பு, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கட்டுமான பொருட்களை ஏற்றி கொண்டு வந்த லாரி ரேவதி மீது பயங்கரமாக மோதியது.
 இதனால் நிலைதடுமாறி கீழே விழந்த அவரது உடல் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் ரத்தவெள்ளத்தில் துடித்தார்.

விபத்து

அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.   அதே நேரத்தில் அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய லாரியை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆம்புலன்ஸ்

இதையடுத்து அங்கு வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.   மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்துள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web