வீடியோ... முதல்வரிடம் நேரில் ரூ1000 உரிமைத் தொகை கேட்ட கிராமத்து பெண்கள்!!

 
ஸ்டாலின்

 
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில்இருக்கும்  பண்ணை வீட்டில் இருந்து சென்னைக்கு காரில் வந்துகொண்டிருந்தார்.  கார் காஞ்சிபுரம்  ஸ்ரீபெரும்புதூர் அருகே கிளாய் கிராமத்தின் வழியாக சென்றது.

வழியில் காத்திருந்த பெண்களை பார்த்து முதல்வர் காரை நிறுத்தச் சொல்லி நலம் விசாரித்தார்.  அவர்கள் கிளாய்பகுதியில் வசித்து வருபவர்கள் . இரண்டு பேரும்  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 தங்களுக்கு கிடைக்கவில்லை என முதல்வரிடம்  புகார் தெரிவித்தனர். உடனடியாக அருகில் இருந்த கட்சி பிரமுகரிடம் இது குறித்து விசாரித்தார்.

மகளிர் உரிமை தொகை

அத்துடன்  அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் பேசி மாதம் ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.  அதே நேரத்தில்  அப்பகுதியின் முக்கிய சாலைகளில் விளக்கு இல்லாமல் இருப்பதால் உடனடியாக உயர் கோபுர விளக்கு அமைக்கவும் உத்தரவிட்டார். இந்த வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web