எங்க வாழ்வாதாரமே போச்சு.... அமைச்சரின் காலில் விழுந்து கதறிய பெண் வியாபாரிகள்... !

 
சிவசங்கர்

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது அதன் படி தென் மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.பயணிகளின் வசதிக்காக  சென்னையின்பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன 

இதனை ஆய்வு செய்யவும், பயணிகளின் குறைபாடுகள் மற்றும் தேவைகளை நேரில் கேட்டறியவும்  தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்   கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார்.   அப்போது அங்கு வந்த பெண்கள் சிலர் கதறி அழுது சில கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர். அதை அமைச்சர் கேட்டுக் கொண்டிருந்த போது திடீரென அனைவரும் அமைச்சரின் காலில் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பெண்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

அமைச்சரின் காலில் விழுந்த பெண்கள்

அமைச்சரிடம் கோரிக்கை வைத்த பெண்கள் அனைவரும் பெருங்களத்தூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் சிறுதொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.ஆனால், அனைத்து பஸ்களும் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படுவதால், பெருங்களத்தூர் பஸ் நிலையத்துக்கு பஸ்கள் அதிகளவில் வராததால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

முதலில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்து வந்தேன். பின்னர் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்தேன். பேருந்து நிலையம் முற்றிலும் கேளம்பாக்கமாக மாற்றப்பட்டுள்ளதால், பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் பெரிய அளவில் கூட்டம் இல்லை.பேருந்து வராததால், வியாபாரம் செய்ய முடியாமல் கிட்டத்தட்ட 300 பேரின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எனவே உடனடியாக எங்களை கேளமாக்கம் பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தென் மாவட்ட பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து  புறப்படும்; கோயம்பேட்டில் இருந்து இயங்காது: அமைச்சர் அறிவிப்பு ...

பேருந்து நிலையம் எங்கள் வாழ்வாதாரம். அதைத்தான் இத்தனை வருடங்களாக வாழ்ந்து வருகிறோம். ஆனால், தற்போது பஸ் ஸ்டாண்டுக்கு பஸ்கள் வருவதில்லை. பஸ் வராததால், பயணிகள் வருவதில்லை. எனவே எங்கள் குழந்தைகளை பாதுகாக்கவும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web